‘கனலி’ — சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

தமிழ் இணைய இலக்கிய இதழ்களில் முன்னணி இதழாக உருவெடுத்திருக்கும் ‘கனலி’யின் அடுத்த சிறப்பிதழ் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழாக வெளிவருகிறது. இந்தச் சிறப்பிதழின் தொகுப்பாசிரியராகப் பணியாற்றவிருக்கிறேன். கனலியின் தி.ஜானகிராமன் சிறப்பிதழ், ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ் ஆகியவற்றைத் தொடர்ந்து, தமிழில் முன்மாதிரி இல்லாத இத்தகையச் சிறப்பிதழ் ஒன்று காரியமான விளைவுகளை நிச்சயம் உண்டாக்கும் என்று நம்புகிறேன்.


‘கனலி’ விக்னேஷ்வரன் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் குறித்து ஃபேஸ்புக்-இல் வெளியிட்ட அறிவிப்பு:

கனலி-யின் வெற்றிகரமான ஜப்பானிய சிறப்பிதழிற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி ஒன்றை அறிவித்திருந்தோம். அந்த இடைவெளி என்பது வாசகர்கள் அனைவரும் கனலி இணைய இதழ்களை முழுமையாக வாசித்து இன்புறத் தானே தவிர ஒருபோதும் எங்களுக்கு அல்ல.

நீங்கள் அனைவரும் தந்து உதவிய அத்தனை ஊக்கத்துடன் மீண்டும் கனலி-யின் அடுத்த சிறப்பிதழிற்கான அறிவிப்பை இப்போது வெளியிடுகிறோம்.

கனலி-யின் அடுத்த சிறப்பிதழ் சூழலியல் – காலநிலைச் சிறப்பிதழ். இவை இரண்டும் ஒரு முக்கியமான உலகளாவிய பிரச்சினையாக இன்று மாறிவருகிறது. இவற்றின் மீது தமிழிலக்கியச் சூழலில் கவனத்தை குவிக்க கனலி விரும்புகிறது.

அந்த வகையில் இந்தச் சிறப்பிதழை மிகவும் முக்கியமான ஒரு சிறப்பிதழாக உருவாக்க கனலி விரும்புகிறது.இந்த சிறப்பிதழ் வடிவமைப்பில் மிகவும் முக்கியமான தோழராக S Arun Prasath அவர்கள் இருப்பார். சூழலியல் – காலநிலை மாற்றங்களைப் பற்றி தொடர்ந்து அவர் எழுதியும் பேசியும் வருகிறார் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

அவருடன் இணைந்து இந்தச் துறைசார் வல்லுனர்களான Narayani Subramanian, Hema Zephyr போன்ற தோழர்களும் தங்களது ஆலோசனைகளை தந்து உதவி செய்வார்கள். இவர்கள் அனைவருடன் கனலி அணியும் இணைந்து இந்தச் சிறப்பிதழை உருவாக்கும்.

கனலிக்கு மேலும் மேலும் கடமைகள் கூடுகிறது. ஆனால் ஒரு போதும் அதைப்பற்றிய பயம் கனலிக்கு இல்லை. ஆமாம் நீங்கள் அனைவரும் எங்களுடன் இருக்கிறீர்களே அது ஒன்றும் போதும் எந்தத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்து பணிகளை செய்து முடிக்க.

கனலியின் பதிமூன்றாவது இதழ் ஜனவரியில் எப்போதும் போல் வெளிவரும்.

நன்றி!

எப்போதும் அன்புடன்,
கனலி ஆசிரியர் குழு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s