பாலசுப்ரமணியன் பொன்ராஜ் நேர்காணல் — கனலி-13வது இதழ்

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணைய இதழின் 13ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. ‘சமகால இலக்கிய முகங்கள்’ என்ற புதிய பகுதியில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கவனப்படுத்தப்பட்டிருக்கிறார். இதில் இடம்பெற்றிருக்கும் அவரது நேர்காணலை க. விக்னேஷ்வரனும் நானும் இணைந்து மேற்கொண்டிருக்கிறோம். தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன. ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் …

இந்த ஆண்டின் முதல் கட்டுரை

பிரெஞ்சுத் தத்துவவியலாளர் ஃபெலிக்ஸ் கடாரியின் ‘தி த்ரீ எகாலஜீஸ்’ நூல் குறித்த கட்டுரை ஒன்றைப் புதிதாக வெளியாகியிருக்கும் ‘தமிழ்வெளி’ காலாண்டிதழுக்கு எழுதியிருக்கிறேன். தமிழில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டு, சூழலியல் சார்ந்த நம்முடைய உரையாடலுக்குள் கொண்டுவரப்பட வேண்டிய ஒரு நூல் இது என்பதால், வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கட்டுரையையும், இதழையும் வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன், நன்றி! தமிழ்வெளிநவீனக் கலை இலக்கியக் காலாண்டிதழ்+91 90 9400 5600ஃபேஸ்புக்: Tamizhveliடிவிட்டர்: @Tamizhveli சென்னையில் பனுவல், டிஸ்கவரி புக் பேலஸ், பரிசல், be4books யாவரும் …

புதிய நூல்

ஆண்டனி ஷடீட்: ஓர் இதழியல் வாழ்க்கை என்ற தலைப்பில் சர்வதேச இதழியலின் ஒப்பற்ற ஆளுமைகளுள் ஒருவரான, என்னுடைய ஆசான் ஆண்டனி ஷடீட்-ஐப் பற்றிய நூல் ஒன்றை இன்று தொடங்கியிருக்கிறேன். அவரது வாழ்வையும் பணியையும் அறிமுகப்படுத்தும் நூலாக இது அமையும். செப்டம்பர் 26, ஆண்டனியின் பிறந்தநாள் அன்று நூல் வெளியாகும். அட்டை வடிவமைப்பு: ஸ்ரீநிவாச கோபாலன் ஆண்டனி ஷடீட்: ஒரு அறிமுகம் https://arunprasath.substack.com/p/--c6b