கனலி ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ – ஏன்?

கனலி கலை இலக்கிய இணையதளம் வெளியிடவிருக்கும் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழின்’ நோக்கம், தேவை சார்ந்த கேள்விகளுக்கு சிறப்பிதழ் ஆசிரியர் சு. அருண் பிரசாத் பதிலளிக்கிறார். 1) சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த சிறப்பிதழ் ஒன்றை உருவாக்க முயல்வதன் அடிப்படை நோக்கம் என்ன? இக்கேள்விக்கான பதிலாக அறிஞர் நோம் சாம்ஸ்கியின் மேற்கோள் ஒன்றை முன்வைக்கிறேன்: “முழுமையான பேரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்கும் விதமான தலைப்புச் செய்திகளை ஒவ்வொரு செய்தித்தாளும் அன்றாடம் வெளியிட வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளில், …