கனலி ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ – அறிவிப்பு

கனலி கலை இலக்கிய இணையதளத்தின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ குறித்து க. விக்னேஷ்வரன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள குறிப்பு.


வணக்கம்!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கனலி கலை இலக்கிய இணையதளத்தின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ வரும் பிப்ரவரி 15 அன்று வெளியாகிறது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் இணையச் சூழலில் முன்னுதாரணம் அற்ற முற்றிலும் புதிய முயற்சி, முன்னெடுப்பு இது என்பதால் முன்பு எப்போதையும்விட வாசக நண்பர்கள் தங்கள் வாசிப்பையும் ஆதரவையும் மேலதிகமாக வழங்கி இந்தச் சிறப்பிதழைப் பரவலான வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அட்டைப் பட விளக்கம்:

கனலி சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருப்பது காலநிலையியலாளர் எட் ஹாக்கின்ஸ் உருவாக்கிய வெப்பக் கோடுகள் (Warming stripes). புவியின் சராசரி வெப்பம் நீண்ட காலத்தில் எவ்வாறு உயர்ந்துவந்திருக்கிறது என்பதை எளிமையாக விளக்கும் வகையில் ஹாக்கின்ஸ் இதை உருவாக்கியுள்ளார். 1850 தொடங்கி 2018 வரை புவியின் சராசரி வெப்ப உயர்வு, (வரைபடத்தில்) இடமிருந்து வலமாக நீல (குளிர்ச்சி) வண்ணத்தில் இருந்து சிவப்பு (வெப்பம்) வண்ணத்துக்கு மாறிவந்திருக்கும் கோடுகள் மூலம் உணர்த்தப்பட்டிருக்கிறது. ‘தி எகானமிஸ்ட்’ உள்ளிட்ட பல சர்வதேச இதழ்கள் வெளியிட்ட காலநிலைச் சிறப்பிதழ்களின் அட்டைப் படமாக இந்தக் கோடுகள் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s