தமிழ்நாட்டின் முதன்மை அறிவுத் திருவிழாவான சென்னை புத்தகக் காட்சி, இந்த ஆண்டு சர்வதேசப் புத்தகக் காட்சியாகப் பரிணமித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு பாடநூல் – கல்வியியல் பணிகள் கழகமும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் – பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து, சர்வதேசப் புத்தகக் காட்சியை நடத்துகின்றன. தமிழ்நாட்டின் அறிவுப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கவுள்ள இக்கண்காட்சி குறித்த மூன்று முக்கிய நேர்காணல்கள், Tamil The Hinduவின் நடுப்பக்கத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் வெளியாகியுள்ளன.
ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவிருக்கும் சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி குறித்த முழுமையான வரைபடத்தை, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi, பொது நூலகத் துறை இயக்குநர் ElamBahavath K ஐஏஎஸ் (முழு கூடுதல் பொறுப்பு), ஆழி பதிப்பக உரிமையாளரும் சென்னைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் பன்னாட்டுத் தொடர்பு ஒருங்கிணைப்பாளருமான Aazhi Senthil Nathan ஆகியோரின் நேர்காணல்கள் மூலம் பெற முடியும்.

● ‘சாத்தியங்களும் சவால்களும் நிறைந்த சர்வதேசப் புத்தகக் கண்காட்சி!’ – க.இளம்பகவத் ஐஏஎஸ் பேட்டி

● “பதிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!” – ஆழி செந்தில்நாதன் நேர்காணல்

—
w/ ஆதி வள்ளியப்பன், Jeyakumar Mankuthirai, சந்திரமோகன் வெற்றிவேல், Gopalakrishnan Sankaranarayanan.
முகப்புப் படம்: Chennai International Bookfair 2023