அறிமுகம்

cropped-s-arun-prasath-1.jpg
டம்: முத்தமிழ் மீடியா, சென்னை.

கன்னியாகுமரி மாவட்டத்தின் கடலோர கிராமங்களுள் ஒன்றான மணவாளக்குறிச்சியில் 1996இல் பிறந்தேன். திண்டுக்கல் என்னை வளர்த்த ஊர். அங்கு ஸ்ரீ வாசவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிக் கல்வியையும் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் இயற்பியலும் படித்தேன். பிறகு புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்பியலில் பட்டமேற்படிப்பு முடித்தேன்.

சிறுவயதில் ஏற்பட்ட வாசிப்புப் பழக்கத்தால் என்னுடைய ஈடுபாடும் ஆர்வமும் எழுத்தில் நிலைத்தது. விளைவாக, ஒரு பத்திரிகையாளனாக ஆவது என்று என்னுடைய பதினான்கு வயதில் முடிவெடுத்தேன்.

செயல்பாடுகள்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது (2010-11) சுட்டி விகடனில் ‘சுட்டி ஸ்டார்’ எனப்படும் மாணவப் பத்திரிகையாளராகவும், கல்லூரி இரண்டாம் ஆண்டில் (2015-16) விகடன் குழும இதழ்களில் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு. 2018ஆம் ஆண்டு மே-ஜூன் மாதத்தில் இந்து தமிழ் திசை நாளிதழில் பணிக்கால பயிற்சி பெற்றேன்.

படிப்புச் செயல்பாட்டின் (தொடர்பியல்) ஒரு அங்கமாக என்னுடைய ஆசிரியத்துவத்தில் 2018 நவம்பரில் வெளியான ‘தி மெட்ராஸ் மேகஸின்’ என்ற ஆங்கில இதழான பரவலான கவனத்தைப் பெற்றது.

மொழிபெயர்ப்பில் தீவிர ஆர்வம் உண்டு. கட்டுரைகள், நேர்காணல்கள், புத்தகப் பகுதிகள் ஆகியவற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்வதை மொழிபெயர்ப்பில் முதன்மைத் தெரிவுகளாகக் கொண்டுள்ளேன். மணல்வீடு இதழ் 36இல் என்னுடைய முதல் மொழியாக்கம் வெளியானது; சிற்றிதழ் ஒன்றில் வெளியாகும் என்னுடைய முதல் ஆக்கமும் இதுவே.

நவீன/ சமகால உலக வரலாறு, சர்வதேச அரசியல், சூழலியல் & காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் முதன்மையான ஈடுபாடு கொண்டிருக்கிறேன்.

பணி அனுபவம்

ஜூன் 2019 முதல் மே 2020 வரை இந்து தமிழ் திசை நாளிதழின் இணைப்பிதழ்கள் பிரிவில் ‘உயிர் மூச்சு’ மற்றும் ‘ஆறாம் அறிவு’ இதழ்களின் பக்க பொறுப்பாளராகப் பணியாற்றினேன். மேலும், தீபாவளி மலர் – 2019, 2020 பொங்கல் மலர் – 2020, பொது அறிவு – 2019, இயர் புக் – 2020, 2021 ஆகியவற்றின் தயாரிப்பிலும் பங்களித்திருக்கிறேன்.

பிப்ரவரி 2021 முதல் ஆனந்த விகடன் இதழின் நிருபராகச் சென்னையில் பணியாற்றி வருகிறேன்.

கிண்டில்

இளம் காலநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் ஆற்றிய உரைகளின் மொழிபெயர்ப்பு, நம் வீடு பற்றி எரிகிறது!, கிண்டிலில் வெளியான என்னுடைய முதல் நூல். இந்நூலை வாங்குவதற்கான இணைப்பு இங்கே.

2018-2020 காலகட்டத்தில் நான் எடுத்த பல்வேறு நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 11 நேர்காணல்களின் தொகுப்பு, நேர்காணல்கள்: வரலாறு – வாசிப்பு – அறிவியல். வரலாறு, அறிவியல், சுற்றுச்சூழல், இலக்கியம், வாசிப்பு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் பரந்தும், பல தலைப்புகளை உள்ளடக்கியும் உள்ள நேர்காணல்களாக இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்நூலை வாங்குவதற்கான இணைப்பு இங்கே.

இதுவரை கிண்டிலில் வெளியாகியிருக்கும் என்னுடைய நூல்கள் தொகுக்கப்பட்டிருக்கும் அமேசான் ஆசிரியர் பக்கம்: http://amz.run/48Pq

1.5 ºC 🔥 தமிழில் காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் குறித்து நான் இதுவரை எழுதிய, இனிமேல் எழுதப் போகும் கட்டுரைகளை இந்தத் தளத்தில் வாசிக்கலாம்: thegreatwarming.wordpress.com

மின்மடல்

Substackஇல் இன்று என்ற பெயரில் வாரம் ஒரு மின்மடல் எழுதுகிறேன். கலை, இலக்கியம் தொடங்கி காலநிலை மாற்றம்வரை பல்வேறு தலைப்புகளில் வெளியாகும் கட்டுரைகளை நேரடியாகப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவுசெய்து கொள்ளலாம்: https://arunprasath.substack.com/

தொடர்புக்கு:
மின்னஞ்சல்: mails2arunprasath@gmail.com
செல்பேசி: +91 98945 33396

ட்விட்டர்: @joarunlist