சூழலியலின் தத்துவம்

ஃபெலிக்ஸ் கடாரியின் ‘தி த்ரீ எகாலஜீஸ்’ நூலை முன்வைத்து 1 சூழலியல் என்பது வெறும் ‘இயற்கைப் பொருட்களின் தொகுப்பு’ மட்டும்மல்ல; அது சமூகம், உடல், உள்ளம் ஆகிய மூன்றின் இணைவு. இவை ஒன்றோடொன்றுப் பிரிக்கமுடியாத வகையில் இணைந்து ‘சுற்றுச்சூழல்’ ஆகிறது. உணர்திறன்மிக்க உயிர்க்கோளத்தைக் கொண்டிருக்கும் பிரம்மாண்டச் சூழலியல் அமைப்பு, தற்போதைய நிலைக்குப் பரிணமிக்க சுமார் 450 கோடி ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஓருயிரி தொடங்கி பேருயிரினங்கள்வரை இங்கு உயிர்வாழ்வை மேற்கொண்டிருக்கின்றன. புவியின் சுற்றுச்சூழல் என்பது இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த …

கனலி ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ – அறிவிப்பு

கனலி கலை இலக்கிய இணையதளத்தின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ குறித்து க. விக்னேஷ்வரன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள குறிப்பு. வணக்கம்! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கனலி கலை இலக்கிய இணையதளத்தின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ வரும் பிப்ரவரி 15 அன்று வெளியாகிறது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் இணையச் சூழலில் முன்னுதாரணம் அற்ற முற்றிலும் புதிய முயற்சி, முன்னெடுப்பு இது என்பதால் முன்பு எப்போதையும்விட வாசக நண்பர்கள் தங்கள் வாசிப்பையும் ஆதரவையும் மேலதிகமாக வழங்கி இந்தச் சிறப்பிதழைப் பரவலான …

கனலி ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ – ஏன்?

கனலி கலை இலக்கிய இணையதளம் வெளியிடவிருக்கும் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழின்’ நோக்கம், தேவை சார்ந்த கேள்விகளுக்கு சிறப்பிதழ் ஆசிரியர் சு. அருண் பிரசாத் பதிலளிக்கிறார். 1) சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த சிறப்பிதழ் ஒன்றை உருவாக்க முயல்வதன் அடிப்படை நோக்கம் என்ன? இக்கேள்விக்கான பதிலாக அறிஞர் நோம் சாம்ஸ்கியின் மேற்கோள் ஒன்றை முன்வைக்கிறேன்: “முழுமையான பேரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்கும் விதமான தலைப்புச் செய்திகளை ஒவ்வொரு செய்தித்தாளும் அன்றாடம் வெளியிட வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளில், …

பாலசுப்ரமணியன் பொன்ராஜ் நேர்காணல் — கனலி-13வது இதழ்

கனலி கலை இலக்கியச் சூழலியல் இணைய இதழின் 13ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. ‘சமகால இலக்கிய முகங்கள்’ என்ற புதிய பகுதியில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கவனப்படுத்தப்பட்டிருக்கிறார். இதில் இடம்பெற்றிருக்கும் அவரது நேர்காணலை க. விக்னேஷ்வரனும் நானும் இணைந்து மேற்கொண்டிருக்கிறோம். தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன. ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் …

இந்த ஆண்டின் முதல் கட்டுரை

பிரெஞ்சுத் தத்துவவியலாளர் ஃபெலிக்ஸ் கடாரியின் ‘தி த்ரீ எகாலஜீஸ்’ நூல் குறித்த கட்டுரை ஒன்றைப் புதிதாக வெளியாகியிருக்கும் ‘தமிழ்வெளி’ காலாண்டிதழுக்கு எழுதியிருக்கிறேன். தமிழில் உடனடியாக மொழிபெயர்க்கப்பட்டு, சூழலியல் சார்ந்த நம்முடைய உரையாடலுக்குள் கொண்டுவரப்பட வேண்டிய ஒரு நூல் இது என்பதால், வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கட்டுரையையும், இதழையும் வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன், நன்றி! தமிழ்வெளிநவீனக் கலை இலக்கியக் காலாண்டிதழ்+91 90 9400 5600ஃபேஸ்புக்: Tamizhveliடிவிட்டர்: @Tamizhveli சென்னையில் பனுவல், டிஸ்கவரி புக் பேலஸ், பரிசல், be4books யாவரும் …

புதிய நூல்

ஆண்டனி ஷடீட்: ஓர் இதழியல் வாழ்க்கை என்ற தலைப்பில் சர்வதேச இதழியலின் ஒப்பற்ற ஆளுமைகளுள் ஒருவரான, என்னுடைய ஆசான் ஆண்டனி ஷடீட்-ஐப் பற்றிய நூல் ஒன்றை இன்று தொடங்கியிருக்கிறேன். அவரது வாழ்வையும் பணியையும் அறிமுகப்படுத்தும் நூலாக இது அமையும். செப்டம்பர் 26, ஆண்டனியின் பிறந்தநாள் அன்று நூல் வெளியாகும். அட்டை வடிவமைப்பு: ஸ்ரீநிவாச கோபாலன் ஆண்டனி ஷடீட்: ஒரு அறிமுகம் https://arunprasath.substack.com/p/--c6b

‘நீலம்’, தமிழ்ப்பிரபா: சில கேள்விகள் – எதிர்வினைகள்

என்னுடைய இந்த முறையீட்டுக்குத் தமிழ்ப்பிரபா அளித்திருந்த பதிலும், அதற்கு என்னுடைய மறுபதிலும், இன்னும் சில எதிர்வினைகளும் ‘நீலம்’, தமிழ்ப்பிரபா: சில கேள்விகள் தமிழ்ப்பிரபா: வணக்கம் அருண்பிரசாத், நான் உங்களிடம் கட்டுரை கேட்டது உண்மைதான். நீங்கள் நிச்சயம் தருகிறேனெனச் சொன்னீர்கள். அத்துடன் நீலம் இதழில் வேலை வாய்ப்பு பற்றிக் கேட்டீர்கள். உங்கள் அனுபவத்திற்கு ஏற்றார் போல் சம்பளம் கொடுக்க இயலாத அளவுக்கு நீலம் இதழ் ஆரம்பக் கட்டத்தில்தான் இருக்கிறதென்றும், ஆனால், கட்டுரைக்கு நிச்சயம் மதிப்பூதியம் தருவோம் என்றுதான் சொன்னேன். நீலம் …

‘நீலம்’, தமிழ்ப்பிரபா: சில கேள்விகள்

விளம்பரத்தின் மூலமும் விற்பனையின் மூலமும் வருவாய் பெறும் இதழ் ஒன்றுக்கு என்னைப் போன்ற தொழில்முறை இதழாளன் ஒருவன் எப்படி இலவசமாகப் பங்களிக்க முடியும் என்பதை இந்தப் பதிவை வாசிப்பவர்களிடம் கேள்வியாக நான் முன்வைக்கிறேன். • வணக்கம் தமிழ்ப்பிரபா, 'நீலம்' இதழுக்காக என்னுடைய பங்களிப்பு வேண்டி இரண்டு மாதங்களுக்கு முன்பு (அக்டோபர் 27) வாட்ஸ்அப்-இல் ஆடியோ மெசெஜ் மூலம் என்னைத் தொடர்புகொண்டீர்கள். நான் பங்களிக்கிறேன் என்று என்னுடைய ஒப்புதலை அளித்து, ஒரு கட்டுரைக்கான மதிப்பூதியம் எவ்வளவு என்று கேட்டேன். …

கிண்டிலில் புதிய நூல்: “நேர்காணல்கள்”

கிண்டிலில் வெளியாகியிருக்கும் என்னுடைய புதிய நூல், நேர்காணல்கள்: வரலாறு – வாசிப்பு – அறிவியல் குறித்த அறிமுகம் இளம் காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் ஆற்றிய உரைகளின் மொழிபெயர்ப்பு, நம் வீடு பற்றி எரிகிறது, நூலைத் தொடர்ந்து கிண்டிலில் வெளியாகும் என்னுடைய இரண்டாவது நூல் இது. இத்தொகுப்பில் உள்ள நேர்காணல்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்து தமிழ் திசை நாளிதழுக்காக நான் எடுத்த பல்வேறு நேர்காணல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை. நடுப்பக்கம், உயிர் மூச்சு, ஆறாம் அறிவு இணைப்பிதழ்கள், …

“தமிழ் மனோபாவம் மாற வேண்டும்!”

மொழிபெயர்ப்பு குறித்து யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகர் தமிழிலக்கியத்தில் ஒரு தனித்துவமான ஆளுமை. படைப்பிலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் யுவன், ஒரு மொழிபெயர்ப்பாளரும்கூட. ‘கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்’ (The Man with the Compound Eyes) என்ற தைவானிய நாவலின் ஆங்கிலம் வழி தமிழ் மொழிபெயர்ப்பு இவருடைய சமீபத்திய பங்களிப்பு. ‘துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல், வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை; மலையேற்ற சாகசம் …