கனலி ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ – அறிவிப்பு

கனலி கலை இலக்கிய இணையதளத்தின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ குறித்து க. விக்னேஷ்வரன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள குறிப்பு. வணக்கம்! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கனலி கலை இலக்கிய இணையதளத்தின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ வரும் பிப்ரவரி 15 அன்று வெளியாகிறது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் இணையச் சூழலில் முன்னுதாரணம் அற்ற முற்றிலும் புதிய முயற்சி, முன்னெடுப்பு இது என்பதால் முன்பு எப்போதையும்விட வாசக நண்பர்கள் தங்கள் வாசிப்பையும் ஆதரவையும் மேலதிகமாக வழங்கி இந்தச் சிறப்பிதழைப் பரவலான …

கனலி ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ – ஏன்?

கனலி கலை இலக்கிய இணையதளம் வெளியிடவிருக்கும் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழின்’ நோக்கம், தேவை சார்ந்த கேள்விகளுக்கு சிறப்பிதழ் ஆசிரியர் சு. அருண் பிரசாத் பதிலளிக்கிறார். 1) சூழலியல்-காலநிலை மாற்றம் சார்ந்த சிறப்பிதழ் ஒன்றை உருவாக்க முயல்வதன் அடிப்படை நோக்கம் என்ன? இக்கேள்விக்கான பதிலாக அறிஞர் நோம் சாம்ஸ்கியின் மேற்கோள் ஒன்றை முன்வைக்கிறேன்: “முழுமையான பேரழிவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிவிக்கும் விதமான தலைப்புச் செய்திகளை ஒவ்வொரு செய்தித்தாளும் அன்றாடம் வெளியிட வேண்டும். இன்னும் இரண்டு தலைமுறைகளில், …

காலநிலை மாற்றம்: ஒரு கருத்துக் கணிப்பு

நம் காலத்தின் அதிதீவிரப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினையின் விளைவுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவிலும், தமிழகத்திலும்கூட தலைகாட்டத் தொடங்கிவிட்டன. சர்வதேச ஊடகங்கள் இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, இதுகுறித்த செய்திகளைத் தவிர்க்கக்கூடாத விஷயங்களாகத் தொடர்ந்து வழங்கத் தொடங்கிவிட்டன. இந்தப் பின்னணியில் தமிழ் ஊடகங்கள் இப்பிரச்சினையை எப்படி அணுகுகின்றன, அணுக வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்களின் எண்ணத்தை அறியவே இந்தச் சிறு கருத்துக் கணிப்பு. நண்பர்கள் அவசியம் …

‘கனலி’ — சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்

தமிழ் இணைய இலக்கிய இதழ்களில் முன்னணி இதழாக உருவெடுத்திருக்கும் ‘கனலி’யின் அடுத்த சிறப்பிதழ் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழாக வெளிவருகிறது. இந்தச் சிறப்பிதழின் தொகுப்பாசிரியராகப் பணியாற்றவிருக்கிறேன். கனலியின் தி.ஜானகிராமன் சிறப்பிதழ், ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ் ஆகியவற்றைத் தொடர்ந்து, தமிழில் முன்மாதிரி இல்லாத இத்தகையச் சிறப்பிதழ் ஒன்று காரியமான விளைவுகளை நிச்சயம் உண்டாக்கும் என்று நம்புகிறேன். ‘கனலி’ விக்னேஷ்வரன் சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ் குறித்து ஃபேஸ்புக்-இல் வெளியிட்ட அறிவிப்பு: கனலி-யின் வெற்றிகரமான ஜப்பானிய சிறப்பிதழிற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி …