இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல்!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) ஆய்வாளர்கள் ஆ.கலையரசன், ம.விஜயபாஸ்கர் இருவரும் இணைந்து எழுதியிருக்கும் ‘The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu’ புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. ‘திராவிட மாடல்’ என்ற கருத்தாக்கம், இந்தியாவின் பிற மாநிலங்களைவிட தமிழகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை சமூகத்தில் எல்லோரையும் உள்ளடக்கிய ஒன்றாக எப்படி உயர்த்தியிருக்கிறது என்பதைப் புதிய தரவுகளுடன் இந்த நூல் ஆராய்ந்திருக்கிறது. மாநில உரிமைகள் இன்றைக்கு ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ‘திராவிட மாடல்’ எதிர்கொள்ளும் …

“கட்சித் தாவலைத் தொடங்கி வைத்தவர் ராஜாஜிதான்!”: எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி நேர்காணல்

கூர்மையான அரசியல் பார்வையும் அங்கதமும் கொண்ட மொழியால், நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல் அசைவுகளைப் பதிவுசெய்தவர் இந்திரா பார்த்தசாரதி. 90 வயதைக் கடந்த நிலையிலும் அதே தீவிரத்தோடு சமகால அரசியல் குறித்து ட்விட்டரில் எழுதுகிறார். ‘நான் 1952-ல் முதல் பொதுத்தேர்தலில் வாக்களித்தேன். இன்றும் என் வீட்டுக்கு அருகில் உள்ள நிவாச காந்தி நிலையத்தில் வாக்களித்தேன். ஒருவேளை இதுவே நான் வாக்களிக்கும் கடைசித் தேர்தலாகவும் இருக்கக் கூடும்!’ என்று தேர்தலன்று அவர் போட்ட ட்வீட் வைரலானது. தேர்தலுக்குப் பிந்தைய ஒரு …

“தமிழ் மனோபாவம் மாற வேண்டும்!”

மொழிபெயர்ப்பு குறித்து யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகர் தமிழிலக்கியத்தில் ஒரு தனித்துவமான ஆளுமை. படைப்பிலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல் ஆகிய தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் யுவன், ஒரு மொழிபெயர்ப்பாளரும்கூட. ‘கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்’ (The Man with the Compound Eyes) என்ற தைவானிய நாவலின் ஆங்கிலம் வழி தமிழ் மொழிபெயர்ப்பு இவருடைய சமீபத்திய பங்களிப்பு. ‘துருவப் பிரதேசங்களில் நடக்கும் திமிங்கில வேட்டை முதல், வெப்ப தேசத்தில் மலையைக் குடைந்து பாதை போடுவது வரை; மலையேற்ற சாகசம் …

“குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோமா?”

எழுத்தாளர் மா. கமலவேலன் நேர்காணல் சாகித்திய அகாதமியின் குழந்தை இலக்கியத்துக்கான ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருது, 2010ஆம் ஆண்டு முதன்முறையாகத் தமிழுக்கு ‘அந்தோணியின் ஆட்டுக்குட்டி’ (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு) என்ற சிறார் நூலுக்கு வழங்கப்பட்டது. இந்த நூலை எழுதியவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த மா. கமலவேலன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறார் இலக்கியத்துக்குப் பங்களித்துவரும் இவர், ‘கண்ணன்’, ‘அரும்பு’, ‘கோகுலம்’, ‘சிறுவர் மணி’, ‘சுட்டி விகடன்’ உள்ளிட்ட சிறார் இதழ்களில் எழுதிவந்துள்ளார். சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் …

“உலக இலக்கியத்தின் பரந்த பின்புலத்தில் தமிழ் இலக்கியத்தை வைத்துப் பார்க்கிறேன்”

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் நம்பி கிருஷ்ணன் நேர்காணல் சொல்வனம் இணைய இதழில் வெளியான தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றின் மூலம் எழுத்துலகில் நுழைந்தவர் நம்பி கிருஷ்ணன். கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என அவ்விதழுக்குத் தொடர் பங்களிப்பாளராகப் பரிணமித்த அவரது உலக இலக்கியம் குறித்த விமர்சனக் கட்டுரைகள் ‘பாண்டியாட்டம்’ என்ற பெயரில் (யாவரும் பதிப்பக வெளியீடு) நூலாக வெளியாகியிருக்கிறது. நகுல்வசன் என்ற பெயரில் தமிழ்ப் புனைவுகளையும், Nakul Vāc என்ற பெயரில் ஆங்கில மொழியாக்கங்களையும் இவர் மேற்கொண்டுவருகிறார். “தீவிர வாசிப்பும், செறிவான புரிதலும், …

மொழி, மனிதர்களுக்கு மட்டுமானதல்ல!: ஏவா மேய்யர் நேர்காணல்

நெதர்லாந்தைச் சேர்ந்த ஏவா மேய்யர் (Eva Meijer) ஒரு கலைஞர், எழுத்தாளர், தத்துவவியலாளர், பாடலாசிரியர்-பாடகர். நாவல், சிறுகதை, கட்டுரை என இதுவரை எட்டு நூல்களை மேய்யர் எழுதியுள்ளார். ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவருடைய நூல்கள், பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளன. மனிதர்கள் அல்லாத விலங்குகளின் (nonhuman animals) மொழி குறித்த இவருடைய ‘விலங்கு மொழிகள்’ (Animal Languages: The Secret Conversations of the Living World) நூல் 2016-ல் வெளியானது; …

சூழலியலைப் பாதிக்காத வளர்ச்சி சாத்தியமே! – ‘மியாவாகி’ ராதாகிருஷ்ணன் நேர்காணல்

குஜராத்தில் ஆடைத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்திவரும் தொழில்முனைவோரான ராதாகிருஷ்ணன், ‘மியாவாகி முறை’ என்ற நுட்பத்தின் மூலம் காடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள ‘என்விரோ கிரியேட்டர்ஸ் அறக்கட்டளை’யின் துணை நிறுவனர்களில் ஒருவர். இந்த நிறுவனம் இந்தியாவில் 9 மாநிலங்களில் லட்சக்கணக்கான மரங்களை நட்டு, காடுகளை உருவாக்கியுள்ளது. இதன் தொடக்கம், பின்னணி குறித்து ராதாகிருஷ்ணனிடம் உரையாடியதில் இருந்து: ‘காடு வளர்ப்பு’ என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றியது எப்படி? காடு, சூழலியல் மீது சிறுவயதில் இருந்தே எனக்கு ஈடுபாடு இருந்தாலும், 8 …

“சிந்துவெளியின் மொழிவளம் தென்னிந்தியர்களிடமே உள்ளது!”: டோனி ஜோசப் நேர்காணல்

"சிந்துவெளியின் மொழிவளம் தென்னிந்தியர்களிடமே உள்ளது!" ‘எர்லி இந்தியன்ஸ்’ நூல் ஆசிரியர் டோனி ஜோசப் நேர்காணல் சந்திப்பு: ஆதி வள்ளியப்பன் சு. அருண் பிரசாத் ‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்கள்-தமிழர்கள் யார்?' என்பன போன்ற பல்வேறு கேள்விகள் பல காலமாக விவாதிக்கப்பட்டுவருகின்றன. கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியான 'எர்லி இந்தியன்ஸ்: தி ஸ்டோரி ஆஃப் அவர் ஆன்ஸெஸ்டர்ஸ் அண்ட் வேர் வீ கேம் …

முனைவர் ஆர். ராமானுஜம் நேர்காணல்: கேள்வி கேட்கத் தூண்டுகிறதா நம் அறிவியல் கல்வி?

சென்னை கணிதவியல் அறிவியல் மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ஆர். ராமானுஜம், தேசிய அளவில் அறிவியல் பரப்புரை ஆளுமைகளுள் ஒருவராக அறியப்படுபவர். 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டுவரும் பேராசிரியர், 1999-ல் இருந்து ‘துளிர்’ இதழின் ஆசிரியராகச் செயல்பட்டுவருகிறார். அவருடைய அறிவியல் பரப்புரை செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக, இந்திய தேசிய அறிவியல் கழகம் 2020-ம் ஆண்டுக்கான ‘அறிவியல் பரப்புரைக்கான இந்திரா காந்தி பரிசை’ அவருக்கு அறிவித்துள்ளது. ஆங்கிலம், இந்திய மொழிகளில் அறிவியல் பரப்புரையாளராகச் …

மாசுபாட்டுக்கு விலையாக மக்கள் உயிரைக் கொடுக்கிறோம்: நித்யானந்த் ஜெயராமன் நேர்காணல்

நாட்டின் தலைநகர் டெல்லி மீண்டும் உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது. அதற்குக் காரணம் ஒட்டுமொத்த டெல்லியையும் மூச்சுத்திணற வைக்கும் காற்று மாசுபாடுதான். இந்தக் காற்று மாசுபாடு டெல்லியுடன் நிற்காமல், சென்னைவரை வந்துவிட்டது. உயிரைப் பறிக்கும் இந்தப் பிரச்சினை குறித்துச் சற்றும் அலட்டிக்கொள்ளாத மனோபாவமே நாடெங்கும் நிலவுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவு நம் ஒவ்வொருவரையும் பாதிக்கத் தொடங்கி ஆண்டுகள் பல கடந்துவிட்ட நிலையில், காற்று மாசுபாட்டுப் பிரச்சினையை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெளிவுபடுத்துகிறார் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன்: டெல்லியைச் …