பத்திரிகையாளனாக உருவாதல்

மிக நன்றாக நினைவிருக்கிறது. 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள். தேனியில் நடந்த ஒரு நிகழ்வுக்கு அப்பாவும் நானும் சென்றிருந்தோம். ஊருக்கு திரும்பும்போது தேனி பேருந்து நிலையத்திலிருந்த கடை ஒன்றில் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்த புத்தகங்கள் என் கண்ணில்பட்டன. சுட்டி விகடன் அவற்றுள் ஒன்று. அந்த நாட்களில் அநேக விளம்பரங்களில் தோன்றும் சிறுமியின் படமும், சுட்டி விகடனின் முத்திரையான ‘சுட்டி க்ரியேஷன்ஸ்’ பகுதியில் ‘வீடு’ம் இணைப்பாக அட்டையில் இருந்ததைப் பார்த்த உடனே என்னைக் கவர்ந்திருக்க வேண்டும். அப்பாவிடம் கேட்டேன். …

1.5 ºC 🔥—தமிழில் காலநிலை மாற்றம்

நவீன உலக வரலாற்றில் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட, புவியில் மனிதர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே தீவிரமடையத் தொடங்கிவிட்டன. என்றபோதிலும், நாம் இதற்கு இன்னும் முழுமையாக முகங்கொடுக்கவில்லை. மேற்குலகில் இதுகுறித்த சொல்லாடல்கள் சமீபத்திய ஆண்டுகளில் வலுப்பெறத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் தமிழில் காலநிலை மாற்றம் குறித்த சொல்லாடல்களைத் தீவிரப்படுத்தும் நோக்கில் இத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தின் அறிவியல்-வரலாறு தொடங்கி பல்வேறு தளங்களில் அதுகுறித்த விரிவான கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், அறிவியலாளர்கள்-செயற்பாட்டாளர்கள்-அரசியல்வாதிகள் ஆகியோரின் பேட்டிகள் …

காலநிலைச் சிறப்பிதழ்கள்

குறிப்பு: ‘இன்று’ தளத்தில் வெளியான ‘காலநிலை மாற்றமும் சமகால இதழியலும்’ என்ற கட்டுரையின் ஒரு பகுதியான கீழ்காணும் இத்தொகுப்பு, அத்தளம் அனுமதிக்கும் சொற்களின் எண்ணிக்கை மீறிவிட்டதால் இங்கு பதிவிடப்படுகிறது. The Economist, 21 September 2019 https://www.economist.com/weeklyedition/2019-09-21 இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு, இதழ் வடிவில், வாரம் ஒருமுறை வெளியாகும் செய்தித்தாள் ‘தி எகானமிஸ்ட்’. இதன் 176 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக குறிப்பிட்ட ஒரே ஒரு தலைப்பை மட்டும் மையப்படுத்தி முழு இதழும் உருவாகப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. 18ஆம் …

‘இன்று’

வணக்கம்! ‘இன்று’ என்னும் இப்புதிய தளத்துக்கு உங்களை வரவேற்கிறேன். 21ஆம் நூற்றாண்டின் உலக இயக்கம் என்பது மனிதனின் ஒட்டுமொத்த புரிதலுக்குச் சவாலாக விளங்கும் வகையில், அதிதீவிர சிக்கலான தன்மையை அடைந்திருக்கிறது; ஓர் எளிய உதாரணம், காலநிலை மாற்றம். இன்றைக்கு உலகளாவிய நிகழ்வு ஒன்றைப் புரிந்துகொள்ள, குறிப்பிட்ட அந்த ஒன்றை மட்டும் கவனிப்பது பலனளிக்காது; மாறாக, நம்பமுடியாத வகையில் அதன் இயக்கத்துக்குக் காரணிகளாக இருக்கும் பல்வேறு அம்சங்களின் அடிப்படைகள் பற்றிய புரிதலைக் கொண்டிருப்பதே, அந்த உலகளாவிய நிகழ்வு ஒருவர் …

நம் வீடு பற்றி எரிகிறது!

நம் வீடு பற்றி எரிகிறது!: கிரெட்டா துன்பர்க் உரைகள் தமிழில்: அருண் பிரசாத் சமகாலத்தின் அதி தீவிரவப் பிரச்சினையாக, மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றம் உருவெடுத்திருக்கிறது. புவியில் உயிர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் விளைவுகளைக் கொண்டுவந்திருக்கும் இந்த வாழ்வாதாரப் பிரச்சினை குறித்த எந்த அக்கறையும் இன்றி ‘வளர்ச்சி’ என்ற பெயரில் உலக நாடுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நவீன வரலாற்றில் காலநிலை மாற்றத்துக்கு முதன்மைப் பங்களிப்பாளர்களாக விளங்கும் மேற்கத்திய நாடுகளின் இப்பிரச்சினை குறித்த அக்கறையின்மைக்கு எதிர்வினையாக கிரெட்டா துன்பர்க் தனியாளாய்த் …

கிரெட்டாவின் உரைகள் மின்னூலாக

காலநிலை செயல்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க்-இன் முக்கியத்துவம் வாய்ந்த உரைகளில் சிலவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன்; விரைவில் மின்னூலாக அமேசானில் வெளியாகும்.

சமகாலத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

The World: A Brief Introduction by Richard N. Haass Penguin Publishing Group, 400pp, May 2020 இன்றைய உலகம், சாமனியர் ஒருவர் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்குச் சிக்கலான தன்மையை (complexity) அடைந்துவிட்டது. அரசியல், பொருளாதாரம், அறிவியல்-தொழில்நுட்பம் தொடங்கி அனைத்தும் complexஆன கட்டமைப்புகளாக மாறத் தொடங்கிவிட்டன. இவற்றைப் புரிந்துகொள்ள பள்ளி, கல்லூரியில் வழங்கப்படும் (கல்வி) அறிவு போதுமானதாக இல்லை. இவற்றைப் பயின்று வரும் ஒருவர், தான் வாழும் காலத்தில் நிகழும் சமூக, …

நஞ்சைக் கக்கும் நரகங்கள்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மே 7-ம் தேதி எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவு இந்தியத் தொழிற்சாலை களின் தரம் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கிவைத்துள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. கெமிக்கல்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான இந்த ஆலை, ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் மூடப்பட்டிருந்த நிலையில், உற்பத்திக்காக மீண்டும் திறக்கப்பட்டபோது ஸ்டைரீன் என்ற வேதி வாயுக் கசிவால் விபத்து நேர்ந்துள்ளது. விசாகப்பட்டினத்தின் வேங்கடபுரம் கிராமத்தில் இந்துஸ்தான் பாலிமர்ஸ் நிறுவனத்தால் 1961-ல் இந்தத் தொழிற்சாலை …

ராஜு, காம்யூ, மணிக்கண்ணன்: எப்போதும் சில நினைவுகள்!

எழுதப் பயின்ற காலத்தில் நான் எழுதியவற்றுள் இப்போதும் என் மனதுக்கு நெருக்கமாக இருப்பவை: ‘சுப்ரமண்ய ராஜு: வித்தியாசமானதெல்லாம் விசேஷமானதல்ல!’; ‘பு.வ. மணிக்கண்ணனும் ஆல்பெர் காம்யூவும்’ என்ற இரண்டு கட்டுரைகள். இந்த இரண்டு மனிதர்களின் கிளர்ச்சியூட்டும் பெயரும், திகைக்கச் செய்யும் அவர்களுடைய வாழ்வும்தான் அவர்களைப் பற்றிய தேடலை என்னுள் தொடங்கிவைத்தது. அப்போது எனக்குக் கிடைத்த மிகக் குறைவான தகவல்களைக் கொண்டே, ராஜு பற்றிய முதல் கட்டுரையை 2016 ஏப்ரலில் எழுதினேன்; அவருக்கு ஒரு பயோகிராஃபி எழுதும் அளவுக்குத் தகவல்களை …

கொரோனா: உலகளாவிய தீர்வுக்கு நாம் தயாரா?

கொரோனா: உலகளாவிய தீர்வுக்கு நாம் தயாரா? நேர்கண்டவர்: கெவின் பெர்ஜர்; தமிழில்: சு. அருண் பிரசாத் கொரோனா வைரஸ் தொற்று ஏற்கெனவே கணித்திருக்கக்கூடிய ஒன்று என்று டென்னிஸ் காரெல் (Dennis Carroll) கூறியபோது அவர் குரலில் கடுமை இல்லை; மாறாக, இந்த நோய் பரவுவதால் பீதியடைந்திருக்கும் மக்களுக்கான அனுதாபமே வெளிப்பட்டது. விலங்குவழித் தொற்றுப் பரவலின் அச்சுறுத்தல், மனிதர்கள் அல்லாத விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்க் கிருமிகள் ஆகியவை குறித்து, பல பதிற்றாண்டுகளாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டுவருபவர் டென்னிஸ். …

மொழி, மனிதர்களுக்கு மட்டுமானதல்ல!: ஏவா மேய்யர் நேர்காணல்

நெதர்லாந்தைச் சேர்ந்த ஏவா மேய்யர் (Eva Meijer) ஒரு கலைஞர், எழுத்தாளர், தத்துவவியலாளர், பாடலாசிரியர்-பாடகர். நாவல், சிறுகதை, கட்டுரை என இதுவரை எட்டு நூல்களை மேய்யர் எழுதியுள்ளார். ஆங்கிலம், சீனம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவருடைய நூல்கள், பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளன. மனிதர்கள் அல்லாத விலங்குகளின் (nonhuman animals) மொழி குறித்த இவருடைய ‘விலங்கு மொழிகள்’ (Animal Languages: The Secret Conversations of the Living World) நூல் 2016-ல் வெளியானது; …