சோவியத் – தமிழ்நாடு திட்டம்

கரோனா பெருந்தொற்றின் தொடக்க மாதங்களில், முழுப் பொதுமுடக்கக் காலகட்டத்தில் இரண்டு வெவ்வேறு தலைப்புகள் சார்ந்து எழுத்துத் திட்டத்துக்கான பணிகளைத் தொடங்கினேன்: ஒன்று, காலநிலை மாற்றம்; இரண்டு, சோவியத் ஒன்றியத்தின் உடைவு. பொதுமுடக்கக் காலத்தின் பெரும்பகுதி வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழல் நிலவியதால், முதல் திட்டம் கனலி கலை இலக்கிய இணையதளம் மூலம் வெற்றிகரமாக ஈடேறியது; சூழலியல் காலநிலைச் சிறப்பிதழாக வெளியாகி ‘பூமி இழந்திடேல்’ என்கிற தலைப்பில் புத்தகமானது. பெருந்தொற்றிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பத் தொடங்கியிருந்த நிலையில், …