காலநிலைக் குறிப்புகள் – உயிர் மூச்சு குறுந்தொடர்

‘இந்து தமிழ் திசை’யின் உயிர் மூச்சு இணைப்பிதழில் ‘காலநிலைக் குறிப்புகள்’ என்கிற தலைப்பில் குறுந்தொடர் ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். கடந்த ஆண்டு வெளியான #பூவுலகுஇன்று தொடரின் நீட்சியாக இதைக் கருதலாம். போரும் காலநிலை மாற்றமும் என்கிற பொருளில் அமைந்த தொடரின் முதல் கட்டுரை இன்று வெளியாகியிருக்கிறது. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை! பார்க்க: பூவுலகு இன்று: நிறைவுக் குறிப்பு

‘இன்று’

வணக்கம்! ‘இன்று’ என்னும் இப்புதிய தளத்துக்கு உங்களை வரவேற்கிறேன். 21ஆம் நூற்றாண்டின் உலக இயக்கம் என்பது மனிதனின் ஒட்டுமொத்த புரிதலுக்குச் சவாலாக விளங்கும் வகையில், அதிதீவிர சிக்கலான தன்மையை அடைந்திருக்கிறது; ஓர் எளிய உதாரணம், காலநிலை மாற்றம். இன்றைக்கு உலகளாவிய நிகழ்வு ஒன்றைப் புரிந்துகொள்ள, குறிப்பிட்ட அந்த ஒன்றை மட்டும் கவனிப்பது பலனளிக்காது; மாறாக, நம்பமுடியாத வகையில் அதன் இயக்கத்துக்குக் காரணிகளாக இருக்கும் பல்வேறு அம்சங்களின் அடிப்படைகள் பற்றிய புரிதலைக் கொண்டிருப்பதே, அந்த உலகளாவிய நிகழ்வு ஒருவர் …