காலநிலைக் குறிப்புகள் – உயிர் மூச்சு குறுந்தொடர்

‘இந்து தமிழ் திசை’யின் உயிர் மூச்சு இணைப்பிதழில் ‘காலநிலைக் குறிப்புகள்’ என்கிற தலைப்பில் குறுந்தொடர் ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். கடந்த ஆண்டு வெளியான #பூவுலகுஇன்று தொடரின் நீட்சியாக இதைக் கருதலாம். போரும் காலநிலை மாற்றமும் என்கிற பொருளில் அமைந்த தொடரின் முதல் கட்டுரை இன்று வெளியாகியிருக்கிறது. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை! பார்க்க: பூவுலகு இன்று: நிறைவுக் குறிப்பு

‘பூமி இழந்திடேல்’ — சென்னை புத்தகக் காட்சியில்…

கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளத்தில் வெளியாகி (2021), பின் புத்தக வடிவம் பெற்ற (2022), ‘பூமி இழந்திடேல்’ - சூழலியல் காலநிலைச் சிறப்பிதழ், சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும் அரங்குகளின் பட்டியல், இதோ: இணைப்புகள்: ⦿ The Climate Book & பூமி இழந்திடேல்: ஓர் ஒற்றுமை! ⦿ தகடூர் புத்தகப் பேரவை நடத்திய இணையவழிக் கூடுகையில் ‘பூமி இழந்திடேல்’ பற்றி ஆய்வாளரும் தொகுப்பின் பங்களிப்பாளர்களில் ஒருவரான நாராயணி சுப்ரமணியனின் உரை.

The Climate Book & பூமி இழந்திடேல்: ஓர் ஒற்றுமை!

இளம் காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பர்க் தொகுத்த ‘The Climate Book’ உலகின் பல பகுதிகளில் நேற்று வெளியாகியிருக்கிறது. மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட, மனிதகுலம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த புவிக்கே அச்சுறுத்தலாக மாறிவிட்ட நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் காலநிலை மாற்றம் குறித்து, உலக அரசியல் தலைவர்கள் உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 2018இல் ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன் ‘பள்ளி வேலைநிறுத்த’ப் போராட்டத்தைத் தொடங்கினார் கிரெட்டா. இதன் மூலம் உலகளாவிய கவனம் பெற்ற கிரெட்டா, உலகம் முழுவதும் …