எண்பதுகளின் மெட்ராஸ் — 10: ‘என் தங்கை’ (1952)

‘எண்பதுகளின் மெட்ராஸ்’ என்ற இந்தத் தொடர், ஐந்து ஆண்டுகளுக்குமுன், 2017 ஜனவரியில் தொடங்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் காணக்கிடைக்கும் மெட்ராஸைத் திரைச்சொட்டுகள்வழி (Screenshots) தொகுத்து ஆவணப்படுத்துவது இத்தொடரின் நோக்கம். கடந்த காலத்து மெட்ராஸ் மீது எனக்குள்ள பெயரிட முடியா உணர்வின் விளைவாக, சென்னை சார்ந்து நான் மேற்கொண்டிருக்கும் பல்வேறு பணிகளில் ஒன்றாக இத்தொடர் அமைகிறது. இதுவரை நிழல்கள் (1980), சந்தியா ராகம் (1989), பட்டம் பறக்கட்டும் (1981), என்னுயிர்த் தோழன் (1990), காதலன் (1994), …

எண்பதுகளின் மெட்ராஸ் – 9

எண்பதுகளில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் காணக்கிடைக்கும் அன்றைய மெட்ராஸ் மாநகரை ஸ்க்ரீன்ஷாட்கள் வழி தொகுத்து ஆவணப்படுத்தும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட எண்பதுகளின் மெட்ராஸ் தொடர் வரும் 26ஆம் தேதி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நிழல்கள், சந்தியா ராகம், பட்டம் பறக்கட்டும், என்னுயிர்த் தோழன், காதலன், மே மாதம், டிக் டிக் டிக், பட்டினப் பிரவேசம் என எட்டு தமிழ்த் திரைப்படங்களில் காணக்கிடைத்த மெட்ராஸைத் தொடர்ந்து, முதன்முறையாக வேற்றுமொழித் திரைப்படமொன்றில் காணக்கிடைக்கும் மெட்ராஸைப் பார்க்கப் …

எண்பதுகளின் மெட்ராஸ் – 8

பட்டினப் பிரவேசம். எண்பதுகளின் மெட்ராஸ் என்பது இத்தொடரின் தலைப்பாக இருந்தாலும், தொண்ணூறுகளில் வெளியான சில திரைப்படங்களில் காணக்கிடைக்கும் மெட்ராஸையும் நாம் பார்த்திருக்கிறோம். விசு எழுதி மேடையேற்றிய நாடகத்தை ஒற்றி கே.பாலச்சந்தர் எழுதி இயக்கிய இத்திரைப்படம் செப்டம்பர் 9, 1977இல் வெளியாகி இருக்கிறது. டெல்லி கணேஷ், சரத் பாபு, சிவசந்திரன் ஆகியோருக்கு தமிழில் இது முதல் படமாக அமைந்திருக்கிறது. கரிமங்கலம் என்ற கிராமத்திலிருந்து பட்டணத்திற்கு (மெட்ராஸ்) வரும் ஒரு குடும்பம் எதிர்கொள்ளும் நகர வாழ்க்கை அனுபவங்களை இப்படம் சொல்லிச் செல்கிறது. …

எண்பதுகளின் மெட்ராஸ் – 7

தமிழ் செய்திப் புகைப்படக்காரர்கள் பற்றிய ஒரு ஆய்வுக்காக பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவரை சந்தித்தபோது, கமல் ஹாசன் நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தின் இறுதிக் காட்சியை குறிப்பிட்டு, புகைப்படக்காரர் ஒருவருக்கு புகைப்படம் எடுப்பதில் உள்ள urgeஐப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். வேறொன்றைத் தேடப் போக இத்திரைப்படம் நினைவுக்கு வரவே அவர் குறிப்பிட்ட இறுதிக் காட்சியை மட்டும் ஒருமுறை பார்க்க முற்பட்டு, ஏற்கனவே படத்தை முழுமையாக ஒருமுறை பார்த்திருந்தாலும் ‘எண்பதுகளின் மெட்ராஸ்’ தொடர் அப்படியே நிற்கிறதே என்ற …

மனிதன் மனிதன்!

Disclaimer: இது கண்டிப்பாக அரசியல் பதிவு அல்ல! ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளின் மீது எனக்கு எப்போதுமே இனம் புரியாத ஏக்கம் உண்டு. சில நேரங்களில் 80களில் பிறந்திருக்கலாமோ என்கிற ஏக்கம் மனதைப் போட்டு பிசைந்தெடுக்கும். இதை வளர்த்தெடுத்ததில் அக்காலகட்டத்தில் வெளியான சில தமிழ்த் திரைப்படங்களுக்கும், சாகாவரம் பெற்ற சில பாடல்களுக்கும் பெரும் பங்குண்டு. குறிப்பாக அந்நாளைய மெட்ராஸில் படமாக்கப்பட்ட படங்களில் காணக்கிடைக்கும் மெட்ராஸைப் பார்க்க நேரும்போது எழும் பெயரிட முடியாத அந்த உணர்வை விளக்கிச் சொல்லத் தெரியவில்லை. …

எண்பதுகளின் மெட்ராஸ் – 6

தொண்ணூறுகளின் மத்தியில் (1994) வெளியான “மே மாதம்” படத்தில் இடம்பெற்ற மிகவும் புகழ்பெற்ற “மெட்ராஸை சுத்திப் பாக்கப்போறேன்” பாடலில் கூட வழக்கமாக காணக்கிடைக்கும் இடங்களைத் தான் பார்க்க முடிகிறது. Let it be, சுற்றிப் பார்க்கலாம் வாங்க!     தொடரின் முந்தைய பகுதிகள்: எண்பதுகளின் மெட்ராஸ் – 1 எண்பதுகளின் மெட்ராஸ் – 2 எண்பதுகளின் மெட்ராஸ் – 3 எண்பதுகளின் மெட்ராஸ் – 4 எண்பதுகளின் மெட்ராஸ் – 5    

எண்பதுகளின் மெட்ராஸ் — 11

‘என் தங்கை’யைத் தொடர்ந்து மீண்டும் ஓர் ‘அந்தக் கால’ப் படம்! 1967. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் முதல்முறையாக ஆட்சியைப் பிடித்த இந்த ஆண்டில்தான், அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் அப்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான இராம.அரங்கண்ணல் ‘கதை’யில் கே.பாலச்சந்தர் இயக்கிய ஐந்தாவது படமும் நாகேஷ் நடித்த நாற்பத்தைந்தாவது படமுமான ‘அனுபவி ராஜா அனுபவி’ வெளியானது (ஜூலை ‘67). ‘பச்சை விளக்கு’, ‘நவக்கிரகம்’, ‘பூவா தலையா’, ‘அவள் ஒரு தொடர்கதை’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த அரங்கண்ணல், கே.பி., ‘நீர்க்குமிழி’ …

எண்பதுகளின் மெட்ராஸ் – 5

எண்பதுகளின் நீட்சியான தொண்ணூறுகளின் மத்தியில் (1994) ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் காதலன். அப்படத்தில் இடம்பெற்ற “ஊர்வசி ஊர்வசி…” பாடலில் காணக்கிடைக்கும் மெட்ராஸ்! ஜெமினி மேம்பாலம் – குதிரைவீரன் சிலை                

எண்பதுகளின் மெட்ராஸ் – 4

என்னுயிர்த் தோழன் (En Uyir Tholan) – Dir. Bharathiraja | February 16, 1990 சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு வாரத்தில் இரண்டு முறை நானும் கவிஞர் நேச மித்ரனும் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்திலுள்ள டீக்கடையொன்றில் தவறாது சந்திப்போம். மாலை ஆறு மணி வாக்கில் தொடங்கும் உரையாடல் இரவு பத்து மணி வரை தொடரும். அந்த சமயத்தில் நான் வாசித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், இளைஞர்களின் வாழ்க்கை முறை என உரையாடல் பல விஷயங்களைப் பற்றியதாக இருக்கும்! மெட்ராஸின் …

எண்பதுகளின் மெட்ராஸ் – 3

பட்டம் பறக்கட்டும் (Pattam Parkkattum) | December 5, 1981 எண்பதுகளில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் காணக்கிடைக்கும் மெட்ராஸை screenshotகளின் வழி தொகுப்பதே இத்தொடரின் நோக்கமாகும். தொடரின் இந்தப் பகுதியில் 1981இல் இராம நாராயணன் இயக்கத்தில் வெளியான “பட்டம் பறக்கட்டும்” படத்தில் இடம்பெற்ற “எல்லோரும் மன்னர்களே” பாடலில் காணக்கிடைக்கும் மெட்ராஸை மட்டும் தொகுத்துள்ளேன். சிங்காரச் சென்னையின் சிலைகளுக்கு தனித்த வரலாறு உண்டு. நகரில் சுமார் 270 சிலைகள் இருப்பதாக தகவல். தாமஸ் மன்றோ சிலையிலிருந்து பெரியார் திடலில் …