சுப்ரமண்ய ராஜு படங்கள்

தமிழின் பல எழுத்தாளர்களுக்கு நல்ல புகைப்படங்களே இல்லை. சுப்ரமண்ய ராஜுவின் பெயர் மட்டும் அறிமுகம் ஆகியிருந்த சமயம், அவர் எப்படி இருப்பார் என்று அறியும் ஆவலில் புகைப்படங்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடினேன். அவரைப் பற்றிய தகவல்களே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சமயத்தில் புகைப்படங்களைத் தேடுவது பேராசை என்று தோன்றியது. அந்த சமயத்தில் மாலன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்த இரண்டு புகைப்படங்களில் ராஜு இருந்தார். இப்போது வரை நமக்கு கிடைக்கும் ராஜுவின் புகைப்படம் என்பது அவை இரண்டும்தான். ‘அலிடாலியா’ ராஜாமணியின் சேகரிப்பில் இருந்த ‘சாவி’ இதழின் அட்டைப்படம் ஒன்றில் வெளியாகியிருந்த படம் அட்டகாசமான ஒன்று!

13879376_10210158368865275_2953807464066787460_n
படம் உதவி: மாலன்
Subramanya Raju
‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ தொகுப்பில் இருக்கும் படம். வரைந்தவர் யாரென்று தெரியவில்லை.
13582135_10153533711471744_7496737785543022245_o
மாலன் ராஜு பாலகுமார்
e0aeb8e0aebfe0aea8e0af8de0aea4e0af81-e0ae9ce0aebe-e0aeb0e0aebee0ae9ce0af81.jpg
எழுத்தாளர் ஸிந்து ஜா-வின் திருமணத்தில் மனைவி குழந்தையுடன் சுப்ரமண்ய ராஜு. படம் உதவி: ஸிந்து ஜா
Chaavi
‘அலிடாலியா’ ராஜாமணியின் சேகரிப்பில் இருந்த 13-01-1980 தேதியிட்ட ‘சாவி’ இதழின் அட்டைப்படம் (நீலச்சட்டையில் நடுநாயகமாக அமர்ந்திருக்கிறார் ராஜு)

IMG_20180531_100056

Raju
முந்தைய நாள் ‘குடிசை’ ஜெயபாரதியை சந்தித்தபோது இந்த செய்தியை பகிர்ந்திருந்தார். மறுநாள் ‘அலிடாலியா’ ராஜாமணியை சந்தித்து பேசியபோது இதே விஷயம் குறித்து ஒரு குறிப்பொன்றை எழுதிய ஞாபகம் என்று தேடி எடுத்துக் கொடுத்தார்.

தொடர்புடைய பதிவுகள்:

Leave a comment